நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஆண்ட்ராய்டில் டவுன்லோட் ஃபார் யூ என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்கிறது.
நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் டவுன்லோட் ஃபார் யூ என்ற அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இது அதன் ஸ்மார்ட் டவுன்லோட் செயல்பாட்டை மேலும் விரிவு படுத்துகிறது. அதன்படி இன்டர்நெட் இல்லாத பகுதிகளில் அல்லது நெட்வொர்க் சரிவர கிடைக்காத நீண்ட நேரப் பயணங்களில் நீங்கள் சிக்கி தவிக்கும் சூழ்நிலைகளில் இது உங்களுக்கு மிகவும் உதவும். அதுமட்டுமன்றி பார்க்க எதுவுமில்லை என்கிற நேரத்தில் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் இந்த அம்சம் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை பதிவிறக்கம் செய்ய உதவும்.
இந்த அம்சத்தில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான படத்தை தேர்வு செய்தால் போதும், வைபை ஆனில் இருக்கும் நேரத்தில் உங்களுக்குப் பிடித்த படங்கள் தானாக டவுன்லோட் ஆகிவிடும். நீங்கள் படத்தை பார்த்து முடித்தவுடன் தானாக டெலிட் ஆகிவிடும். 12 படங்கள் மற்றும் ஒரு சீரிஷிக்கு 3gp டேட்டா மட்டுமே போதும் என கூறப்பட்டுள்ளது.