சுவையான சென்னா பிரியாணி செய்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.
செய்ய தேவையான பொருட்க்கள்:
- எண்ணெய்
- பிரியாணி இலை
- கள் பாசி
- புதினா
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- மஞ்சத்தூள்
- உப்பு
- மிளகாய்தூள்
- கரம் மசாளா தூள்
- ஏலக்காய்
- பூண்டு
- சோம்பு
- பட்டை
- கிராம்பு
- இஞ்சி
- ஊரவைத்த
- சென்னா
- தண்ணீர்
- அரிசி
செய்யும் முறை:
ஒரு குக்கரில் தேவையான எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் பிரியாணி இலை கல்பாசி புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் நரிக்கின 2 பெரிய வெங்காயம் மற்றும் 1 தக்காளி சேர்த்து நன்கு வதங்கும் வரை கிளரவும்.பிறகு ( தூள்,ஏலக்காய், பூண்டு,சோம்பு, பட்டை, கிராம்பு, இஞ்சி) இந்த 6 பொருட்களையும் சேர்த்து நன்கு மிக்சியில் அரைத்து வைத்ததை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு தேவையான அளாவு உப்பு , மஞ்சத்தூள், மிளகாய்த்தூள், மற்றும் கரம் மசாளா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு ஊர வைத்த சென்னாவை 1 நிமிடம் வரை நன்கு வதக்கவும். பின் ஒரு கப் தண்ணீர் சேர்த்து பிறகு தேவையான அரிசி சேர்த்து 2 விசில் வரும் வரை குக்கரில் வைக்கவும். இப்பொளுது சுவையான சென்னா மசாலா ரெடி