குஜராத் மாநிலம் பருச் மாவட்டத்தில் உள்ள ஜகாதியாவில் வேளாண் ரசாயன நிறுவனமான UPL லிமிட்டெட் நிறுவனத்தினுடைய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து யூபிஎல் நிறுவனம் கூறுகையில், “இந்த தீவிபத்தில் 2 தொழிலாளர்கள் பலியானதாகவும், 26 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 5 தொழிலாளர்கள் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஆலையில் வைக்கப்பட்டிருந்த சால்வெண்ட் எனப்படும் கரைப்பு ரசாயனம் தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தீவிபத்தில் பலியான மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என யூபிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.