Categories
கிரிக்கெட் விளையாட்டு

எப்போதுமே தோனியையே நம்பியிருப்பது சரியானதல்ல – சச்சின்.!!

எப்போதும் தோனி போட்டியை முடித்து வைப்பார் என்று நம்பிக்கொண்டிருக்க கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை அரை இறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. மழை பெய்த காரணத்தால் நேற்று தொடர்ந்து நடைபெற்றது. நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 239 ரன்களை சேர்த்தது. நியூசி அணியில் ராஸ் டெய்லர் 74 ரன்களும், வில்லியம்சன் 67 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் முன்னணி வீரர்கள் சொதப்பினாலும் சிறப்பாக ஆடி ஜடேஜா 77 ரன்களும், தோனி 50 ரன்களும் எடுத்து கடைசி வரை போராடினர். முடிவில் இந்திய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் எடுத்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது.

Image result for தோனி

போட்டி முடிந்த பின் பேசிய சச்சின் டெண்டுல்கர், இந்திய அணி 240 என்ற இலக்கை எளிதாக சேஸ் செய்திருக்கும். இது பெரிய ஸ்கோர் அல்ல. தொடக்கத்திலேயே  3 விக்கெட்டுகளை நியூசிலாந்து அணியினர் வீழ்த்தி நெருக்கடி கொடுத்து விட்டனர். ரோகித் மற்றும் கோலியை மட்டுமே சார்ந்திருக்க கூடாது. அவர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்திருக்க வேண்டும் என்று சொல்லி கொண்டிருக்க கூடாது. அனைவருக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது.

Image result for sachin

ஜடேஜா (77 ) மற்றும் தோனி (50) சிறப்பாக ஆடினர். 7-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் என்பது மிக சிறப்பானது. எப்போதுமே தோனி வந்து போட்டியை முடித்து வைப்பார் என்று எதிர்பார்ப்பது சரியானதல்ல. நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டது. வில்லியம்சனின் கேப்டன்சி வியக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |