Categories
லைப் ஸ்டைல்

பல நோய்களுக்கு நிரந்தர தீர்வு… வெந்தய டீயின் அற்புத மருத்துவம்… படிச்சா தினமும் தவறாம குடிப்பீங்க…!!!

உடலில் உள்ள பல பிரச்சினைகளுக்கு அருமருந்தாக அமையும் வெந்தய டீ நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உணவுகளில் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் அதிக சத்துக்களை தருகின்றன. ஆனால் சிலர் டீ குடிப்பது வழக்கம். அதில் கிரீன் டீ மற்றும் மசாலா டீ வரிசையில் தற்போது வெந்தய டீயும் பிரபலமாகி வருகிறது. வெந்தயம் உடல் சூட்டை தணிப்பதுடன் மேலும் பல நன்மைகளை தருகிறது.

வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து சூடாக குடிப்பதால், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து பருமனை குறைக்க இது உதவுகிறது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்றுவலி மற்றும் பிடிப்புகளை போக்க இது உதவும். பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணி பெண்கள் வெந்தய டீ குடித்தால், அது பிரசவ வலியை தூண்டும் அதோடு மட்டுமல்லாமல் எளிதில் பிரசவம் நடக்க உதவும்.

இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால் தாய்பால் சுரப்பு அதிகரிப்பதோடு தாய்ப்பாலில் சத்துக்கள் அதிகரிக்கும். தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயை குடியுங்கள். அதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக அடங்கியுள்ளது. மேலும் மூட்டு வலி மற்றும் முழங்கால் வலி உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால் முழுமையாக நோயிலிருந்து விடுபடலாம். இது சிறுநீர் பெருக்கியாக செயல்படும். இதை குடித்தால் காய்ச்சல் உடனே குறையும்.

வெந்தய டீ பொடுகை போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின்,  இந்த டீயால் தலைமுடியை அலசி அதன் பிறகு கண்டிஷனரை பயன்படுத்துங்கள். இப்படி செய்தால் பொடுகு போய்விடும். இந்த டீ தினமும் வாய்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தொண்டைப்புண் போகும். வாய் துர்நாற்றம் போகும். நீரில் கலந்து குளித்தால் உடல் துர்நாற்றம் பிரச்சனை நீங்கும். இவ்வாறு பல பிரச்சனைகளுக்கு வெந்தயத்தை நிரந்தர தீர்வாக அமைகிறது.

Categories

Tech |