உலக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது ஏமாற்றமளிக்கிறது என்று முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின் அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய அணியின் தோல்வியை ரசிகர்கள் யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்கள் தனது ட்வீட்_டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் , இது ஏமாற்றமளிக்கிறது, ஆனால் அது விளையாட்டின் இயல்பு. நியூஸிலாந்து அணி நன்றாக விளையாடியது. அந்த அணி இறுதி போட்டிக்கு சென்றதுக்கு வாழ்த்துக்கள்.
I'm proud of the way @BCCI played at the @cricketworldcup . It's disappointing but that's the nature of the game. Well played @BLACKCAPS on a fantastic game and all the best for the final.
— Gautam Gambhir (@GautamGambhir) July 10, 2019