அன்பறிவ் ஸ்டண்ட் குழுவில் உள்ள ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது . இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் 65-வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Dilipkumar (From the team of stunt master #Anbariv): Everybody will forget about the action and stunt sequences of the #KGFChapter2 film in 2022. Everybody will talk about the action stunts of the #Thalapathy65 film. It will be a power-packed one! 🔥 @actorvijay @Vijay65TheFilm pic.twitter.com/Xs2bEGrmdk
— DHFV Bioscope (@DHFV_Off) February 23, 2021
இந்நிலையில் இந்தபடத்திற்கு சண்டை பயிற்சி அளித்து வரும் அன்பறிவ் ஸ்டண்ட் குழுவில் உள்ள ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . அந்த வீடியோவில் அவர் ‘அடுத்த வருடம் ‘கேஜிஎஃப்’ படத்தின் சண்டைக் காட்சிகளை மறந்து ‘தளபதி 65′ சண்டைக் காட்சிகளை பற்றி மட்டுமே பேசுவீங்க. அந்த அளவிற்கு பவர் பேக்காக வரவிருக்கிறது’ என்று கூறியுள்ளார் . இதனால் ‘தளபதி 65’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.