Categories
தேசிய செய்திகள்

உலகின் மிகப் பெரிய மைதானம்…. மோட்டேரா மைதானத்தின் சிறப்பம்சம்… என்னென்ன..?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா விளையாட்டரங்கை, பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக, புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா ஸ்டேடியம் தயார்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியத்தை, இன்று  உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முன்னிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.
இதன் சிறப்பம்சம்:
63 ஏக்கர்களில் பரந்து விரிந்துள்ள இந்த அரங்கத்தில், ஒரே நேரத்தில்1 லட்சத்து10 ஆயிரம் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கலாம்.
800 கோடி ரூபாய் செலவில் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம் இவ்வரங்கத்தை கட்டி முடித்துள்ளது.
4 நுழைவாயில்கள் உள்ளன.
பிரம்மாண்டமான விளக்கு கம்பங்களுக்கு பதிலாக மேல் கூரையில் விலங்குகளில் வட்டவடிவில் எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் பிரமாண்ட உணவகம், மினி 3d திரையரங்கம், மிகப் பெரிய நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட இதர வசதிகளும் இதில் உள்ளது.
உலகின் மிகச்சிறந்த மற்றும் பெரிய கிரிக்கெட் மைதானம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள  நிலையில், அந்த பெயரை இனி, மோட்டேரா மைதானம் பெற்றுள்ளது.

Categories

Tech |