பிக்பாஸ் பிரபலம் ஆஜித் புதிதாக ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒன்றை திறந்துள்ளார் .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஆஜித் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பாலாஜி ,கேப்ரியலா, சம்யுக்தா ,ஷிவானி உள்ளிட்ட ஒரு சிலருடன் மட்டுமே நட்புடன் பழகி வந்தார் . இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது அவ்வப்போது பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வந்தார் . மேலும் இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் ஆஜித் சென்னை சூளைமேட்டில் புதிய ரிக்கார்டிங் ஸ்டூடியோ ஒன்றை திறந்துள்ளார் .
இவர் தொடங்கியுள்ள ‘ஏகே சவுண்ட் வொர்க்ஸ்’ ஸ்டுடியோவின் திறப்பு விழாவிற்கு இவரது பிக்பாஸ் நண்பர்களான சிவானி, பாலா ,கேபி, சம்யுக்தா ஆகியோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர் . அவர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஆஜித் ‘எனது ஸ்டுடியோ திறப்புக்காக நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி . இந்த புகைப்படத்தில் சுரேஷ் தாத்தா மிஸ்ஸிங் . இருப்பினும் அவர் நேரில் வந்து வாழ்த்தினார் . அவருக்கும் எனது நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார் .