Categories
தேசிய செய்திகள்

6 to 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. முக்கிய தகவல்..!!

தெலங்கானா மாநிலத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது பெற்றோரிடமிருந்து கடிதம் கட்டாயம் சென்று வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிகள் திறப்பதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை அடுத்த மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிப்.24 முதல் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் தொடங்கப்படும் என்று தெலங்கானா தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி , இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

Categories

Tech |