Categories
உலக செய்திகள்

கார் மீது மோதி…. விபத்துக்குள்ளான விமானம்…. கலிபோர்னியாவில் பரபரப்பு…!!

கலிபோர்னியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலிபோர்னியாவின் லிவர்மோர் நகரில் பரபரப்பான நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையானது லிவர்மோர் விமானநிலைய ஓடுபாதைக்கு இணையாக உள்ளது. அங்கிருந்து புறப்பட்ட சிறிய விமானம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து இசபெல்லா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இது குறித்து தகவல் அறிந்த மருத்துவம் வாகனங்கள்  மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய காவல்துறை விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விசாரணை முடியும் வரை சாலைகள் மூடப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |