அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது இளமை பருவத்தில் நடத்த மறக்க முடியாத சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா “Renegades” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஒபாமா, அமெரிக்காவின் பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியரான Bruce Springsteen என்பவருடன் தனது இளமைப் பருவத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.
அதில், ” சிறுவயதில் நானும் என் நண்பனும் ஒன்றாக சேர்ந்து கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது எங்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது என் நண்பர் ( c **n ) என்ற வார்த்தையை கூறி என்னை அழைத்தார். உண்மையில் அதற்கான அர்த்தம் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த வார்த்தையால் என்னை அழைக்கும் போது நான் காயப்படுவேன் என்பதற்காக அவர் கூறியுள்ளார்.
பின்னர் நாங்கள் இருவரும் ஒரு உடைமாற்றும் அறையில் நின்று கொண்டிருந்தபோது நான் என் நண்பரின் முகத்தில் ஒரு குத்து விட்டேன். அதனால் அவரது மூக்கு உடைந்தது. மேலும் அங்கிருந்த மாணவர்களிடம் அவர் கூறிய அந்த வார்த்தையால் இனி யாரும் என்னை அழைக்கக் கூடாது என்று கூறினேன்” என ஒபாமா தெரிவித்துள்ளார்.