Categories
அரசியல்

அதிமுகவை போல் பின்னடைவு…தோல்வி குறித்து ஜெயக்குமார் கருத்து…!!

தமிழகத்தில் நடைபெற்ற  தேர்தலில் அதிமுக  பின்னடைந்தது போல் இந்திய அணி பின்னடைந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து  அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

Image result for jayakumar

இந்நிலையில் அதிமுக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்,அதில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்தித்தது போல் இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளதாகவும், வெற்றியும் தோல்வியும் வழக்கமாக வருவது தான்,அதிலிருந்து மீண்டு வெல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |