44 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை துணை முதல்வர் ஓபிஎஸ் தொடங்கி வைத்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஓய்எம்சிஏ- வில் மார்ச் 9 வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 700 அரங்குகளில் 6 லட்சம் தலைப்புகளில், சுமார் 600 பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ரூபாய் 10 நுழைவு கட்டணத்துடன் தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.