நடிகர் தனுஷ் ‘மாரி’ பட இயக்குனருடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் ,கர்ணன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இதையடுத்து தனுஷின் 43 வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிவருகிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் தனுஷ் தி கிரே மேன், செல்வராகவனின் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகர் தனுஷ் இயக்குனர் பாலாஜி மோகனுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘மாரி’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து வெளியான ‘மாரி 2’ எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என்றாலும் அந்தப் படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது . தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் . விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .