சசிகலாவுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா சந்தித்து பேசி வருகின்றனர்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் சசிகலாவுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா சந்தித்து பேசினர். விடுதலைக்குப் பிறகு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட சசிகலா, இன்று முதல் தனது ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளை சந்தித்து வருகிறார். இதற்கு முன்னதாக நடிகர் சரத்குமார் மற்றும் அவருடைய மனைவி ராதிகா சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.