Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…!! கத்தாரில் 10 ஆண்டுகளில் 6,500 புலம்பெயர் தொழிலார்கள் உயிரிழப்பு… காரணம் என்ன தெரியுமா…?

கத்தாரில் கடந்த 10 ஆண்டுகளில் 6,500 புலம் பெயர் தொழிலார்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உலகக்கிண்ண கால்பந்து திருவிழாவை நடத்துவதற்கான உரிமையை கத்தார் அரசாங்கம் பெற்றது. அன்றிலிருந்தே இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் வங்கதேசம் ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து கத்தார் -க்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கு சராசரியாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2011 – 2020ஆம் ஆண்டிற்குள் இலங்கை இந்தியா, வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் தரவுகளின்படி 5927 தொழிலாளர்கள் கத்தாரில்  உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்து உள்ளது. மேலும் 2010- 2020ஆம் ஆண்டிற்குள் 824 பாகிஸ்தான்  புலம் பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும்  கூறப்பட்டுள்ளது.  2020 ஆம் ஆண்டில் இறுதி மாதங்களில் நடந்த மரணங்கள் இந்த கணக்குடன் சேர்க்கப்படவில்லை.

வரும் 2022ஆம் ஆண்டில் கத்தார் உலகக்கிண்ண கால்பந்து திருவிழாவை நடத்த போகிறது. இதற்காக 7 பிரம்மாண்ட விளையாட்டு அரங்கங்கள், விமான நிலையம், சாலை, ஹோட்டல்கள் மற்றும் ஒரு புதிய நகரத்தையும் கட்ட வேண்டுமென்று கத்தார் முடிவெடுத்துள்ளது. இந்த கட்டுமானப் பணிகளில் இரவு பகல் என்று பார்க்காமல் புலம்பெயர் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே 6 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அதில் 37 பேர் மட்டும்  இந்த கட்டுமானம் தொடர்பான பணியில் ஈடுபடும் பொழுது உயிரிழந்ததாக அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த தரவுகள் வெளியாகி இரண்டு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்  தொழிலாளர்களை கத்தார் அரசு பாதுகாக்க தவறியதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் கத்தார் உலகக்கிண்ண கால்பந்து கட்டுமானம் தொடர்பான பணிகளில் இதுவரை 2711 பேர் இந்தியர்களும், நேபாள நாட்டவர்கள் 1641 பேரும், வங்காளதேசத்தவர்கள் 1018பேரும், பாகிஸ்தானியர்கள் 874 பேரும், இலங்கையர்கள் 557 பேரும் உயிரிழந்துள்ளனர். ஆனால் இறந்தவர்களுக்கு இதுவரை எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை. மேலும் கத்தார் அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்தியா, நேபாளம் , வங்கதேசம் ஆகிய நாடுகளின் புலம்பெயர்  தொழிலாளர்களில் 61% பேர் இயற்கையாக உயிரிழந்துள்ளனர் என்று  வகைப்படுத்தியாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |