நட்ஸ் சாக்லேட் செய்ய தேவையான பொருட்கள்:
டார்க் சாக்லேட் – 1 1/2 கப் (பொடித்தது)
வெண்ணெய் – அரை கப்
சர்க்கரை – ருசிக்கேற்ப
பாதாம், வால்நட் – 10
முந்திரி பருப்பு – 5
பேரீச்சம்பழம் – 5
காய்ந்த பேரீச்சம் – 10
காய்ந்த திராட்சை – 10
அத்திப்பழம் – தேவைக்கேற்ப
பட்டர் பேப்பர் – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் பாதாம், வால்நட், முந்திரி பருப்பு, பேரீச்சம்பழம், காய்ந்த பேரீச்சம், காய்ந்த திராட்சை,அத்திப்பழம் நட்ஸ்களை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் டார்க் சாக்லேட்டை போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
அடுப்பில் அகலமான கடாயை வைத்து அதில் பதியளவாக தண்ணீர் ஊற்றியபின், கடாயை விட சிறிய பாத்திரத்தை எடுத்து, கடாயில் ஊற்றிய தண்ணீரில் வைத்து கொள்ளவும்.
மேலும் தண்ணீர் ஊற்றிய பாத்திரத்தில்சூடானதும், அரைத்த டார்க் சாக்லேட், வெண்ணெய், சர்க்கரை போட்டு மேலுள்ள பாத்திரத்தை உருகும் அளவுக்கு கொதிக்க வைத்து கரண்டியால் நன்கு கிளறிவிட்டு ஓரளவு கெட்டியாக வரும் போது இறக்கி வைக்கவும்.
பிறகு இறக்கி வைத்த சாக்லேட் கலவையானது, சூடாக இருக்கும் போதே அதில் நறுக்கிய பாதாம், வால்நட், முந்திரி பருப்பு, பேரிச்சம்பழம், காய்ந்த பேரிச்சம்பழம், காய்ந்த திரைட்சை, அத்திப்பழங்களை போட்டு நன்கு கரண்டியால் கலந்ததும், அதை பட்டர் பேப்பரில் மேல் ஊற்றியபின், சுற்றிலும் பரப்பி கொள்ளவும்.
இறுதியில் பட்டர் பேப்பரில் உள்ள சாக்லேட் கலவையை, பிரிட்ஜில் வைத்து சில நிமிடம் கழித்து குளிர வைத்து நன்கு கெட்டியாகி இருகியதும், எடுத்து துண்டுகளாக வெட்டியபின், பரிமாறினால் ஜில்லுன்னு ருசியான நட்ஸ் சாக்லேட் ரெடி.