Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாக்குபையில் இருந்து வந்த சத்தம்… தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை… திருச்சியில் பரபரப்பு…!!

சாக்குப் பையில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை அதன் தாய் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள காவேரி நகர் பகுதியில் இருக்கும் ஒரு காலி மனையில் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் திருச்சி விமான நிலைய போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு போலீஸ்காரர் ஜெயக்குமார் அங்கிருந்த ஒரு சாக்குப் பையில் இருந்து சத்தம் வந்ததை கேட்டார்.

அதன் பின் அந்த பையை எடுத்து பிரித்து பார்த்தபோது, அதில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் 7 மாத குறைபிரசவத்தில் அந்த குழந்தை பிறந்ததால் அதன் தாய் சாக்குப் பையில் வைத்து குழந்தையை வீசிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அந்த குழந்தையை அனுமதித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து திருச்சி விமான நிலைய போலீசார் இந்த குழந்தையை இவ்வாறு மனசாட்சி இல்லாமல் வீசி சென்ற அந்த தாய் யார் என்றும், குறை பிரசவத்தில் பிறந்த காரணத்தினால் இந்த குழந்தை வீசப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |