விழுப்புரத்தில் 2 அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதியதில் 21 பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால் அங்கு வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் ஒரே பாதையில் செல்கின்றன. இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்தும், கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தும் பனையபுரம் அருகே உள்ள அழுக்கு பாலம் இடையே நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாயின.
ஒரே பாதையில் வாகனங்கள் செல்வதாலும் ஓட்டுனரின் கவனக் குறைவாலும் இந்த விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஓட்டுனர் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த விக்ரவாண்டி காவல்துறையினர் பேருந்தில் அடிபட்டு இருந்துத்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர். இதனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.