Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? விஷம் வைத்து கொல்லப்பட்ட கோழிகள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

முன்விரோதம் காரணமாக 6,000 கோழிகளை விஷம் வைத்துக் கொன்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காஞ்சிரங்கோட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜன் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் செண்பகராமன்புதூர் பகுதியில் கோழி பண்ணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கோழி பண்ணையில் உள்ள தண்ணீரில் விஷம் கலந்து 6 ஆயிரம் கோழிகளை மத்தியாஸ் நகரில் வசித்து வரும் ஷாஜன் என்பவர் சுரேசை பழிவாங்கும் நோக்கத்தோடு அவற்றை கொன்று விட்டு தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆரல்வாய்மொழி போலீசார் தலைமறைவான ஷாஜனை தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளனர். இதனையடுத்து சென்னையில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஷாஜன் கோழிப்பண்ணை நடத்தியபோது, தீவனங்கள் திருட்டு போனதால் கோழிப்பண்ணை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை கோழிப்பண்ணை நிறுவனம் ரத்து செய்ததாகவும், இதற்கு சுரேஷ் தான் காரணம் என்று நினைத்து அவரை பழி வாங்குவதற்காக 6000 கோழிகளை விஷம் வைத்து கொன்றது தெரியவந்துள்ளது. அதன் பின் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |