Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆபீசுக்கு வந்த போன் கால்…! நேரில் சென்ற அதிகாரிகள்… அடுத்தடுத்து நடந்த அதிரடி …!!

வேலூரில் அடுத்தடுத்து நடக்கவிருந்த இரண்டு குழந்தை திருமணங்களை குழந்தை நல அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் 25 வயது இளைஞர் ஒருவருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. மற்றும் அதே மாவட்டத்தில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுமிக்கும் ஆந்திராவை சேர்ந்த 26 வயது இளைஞருக்கும் நாளை திருமணம் நாளை நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாவட்ட குழந்தை நல உதவி எண்ணிற்கு வந்த புகாரின் அடிப்படையில் குழந்தை நல அலுவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இன்று நடைபெற இருந்த திருமணத்தையும், நாளை நடக்கவுள்ள திருமணத்தையும் தடுத்து நிறுத்தினர்.

மேலும் குழந்தை திருமணம் செய்ய முயன்ற சிறுமியின் உறவினர்கள் மீதும் அவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். இதனை தொடர்ந்து அந்த இரு சிறுமிகளும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தை திருமணம் என்பது சட்டத்திற்கு புறம்பான செயலாகும் இதை யார் செய்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தை நல அலுவலர்கள் தெரிவித்தார்கள்.

Categories

Tech |