திடீரென வீசிய பலத்த காற்றினால் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் வேரோடு சாய்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளான தச்சம்பட்டு, நவம்பட்டு, துறையூர், அல்லிகொண்டபட்டு போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இதனால் நவம்பட்டு கிராமத்தில் உள்ள விவசாயிகளால் பயிரிடப்பட்டிருந்த கரும்பு வேரோடு சாய்ந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது எங்கள் பகுதிகளில் பெரும்பாலும் கரும்பு பயிரிடப்பட்டு வருகின்றது. இந்த கரும்பு பயிர்கள் பயிரிடப்பட்டு 5 மாதங்கள் ஆனதால் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. இந்த நிலையில் ஒரு சில நாட்களாக வீசிய பலத்த காற்றினால் கரும்பு வேரோடு சாய்ந்துள்ளது. மேலும் பல விவசாயிகள் கடன் வாங்கியே இதை பயிரிட்டுள்ளனர். இதனால் அவர்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.