Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உங்களை போல நாங்களும்  ஏமாற்றம் அடைந்துள்ளோம்” விராத் கோலி வேதனை ..!!

ரசிகர்கள் உங்களை போல நாங்களும்  ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்று இந்திய கேப்டன் ஹோலி ட்வீட் செய்துள்ளார்.

உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

Image result for indian team

புள்ளி பட்டியலில் முதலிடம் வகுத்து ராஜநடை போட்ட இந்திய அணியின் தோல்வியை ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதுகுறித்து தனது ட்வீட்_டர் பக்கத்தில் இந்திய கேப்டன் விராத் ஹோலி  தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

Image result for Virat Kohli

அதில் ,  அணியை ஆதரித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் இது ஒரு மறக்க முடியாத போட்டியாக அமைந்துள்ளது. அணியின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பை நாங்கள் நிச்சயமாக உணர்ந்துள்ளோம். உங்களை போல நாங்களும்  ஏமாற்றம் அடைந்துள்ளோம். என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |