Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மண்ணெண்ணெய் ஊற்றி மனைவிக்கு தீ வைத்த கணவர்…. சிதறிப்போன குடும்பம்…!!

மனைவியின் தகாத உறவு காரணமாக கணவன் மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள இரும்புலி ஊராட்சி அடங்கிய மேட்டு காலனி பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மனைவி ஜீவா. தனது மனைவியின் தகாத உறவை பலமுறை கண்டித்தும்  மனைவியின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் இன்று அதிகாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சம்பவ தினத்தன்று வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் பார்த்திபன் ஜீவா மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மகள் பவித்ரா மீதும் தீக்காயம் ஏற்பட்டது.  மனைவி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். காயமடைந்த இருவரையும் மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |