டெபிட் கார்டை பயன்படுத்தும் பயனர்களுக்கு ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் டெபிட் கார்டை பயன்படுத்தும் பலருக்கு ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்த சந்தேகம் இருந்து வருகிறது. டெபிட் கார்டு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் மையங்களில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், அதன்பிறகு வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்துக்கு மூன்று முறையும் இலவசமாக பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வரைமுறை மீறும் பட்சத்தில் வங்கி குறிப்பிட்ட தொகையை அபராதமாக வசூலிக்கிறது. இது பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.