‘பிக் பாஸ் சீசன் 5 ‘எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆர்வ், இரண்டாவது சீசனில் ரித்திவிகா, மூன்றாவது சீஸனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் டைட்டிலை வென்றுள்ளனர் . வழக்கமாக ஒவ்வொரு சீசனும் ஜூன் மாதம் தொடங்கப்படும் நிலையில் கடந்த ஆண்டு மட்டும் கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இதையடுத்து அந்த சீசன் வெற்றிகரமாக ஜனவரி மாதம் நிறைவடைந்தது .
இந்நிலையில் அடுத்த சீசனுக்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குவார் என்றும் மே மாதம் வரை அவர் தேர்தல் பணிகளில் பிசியாக இருப்பார் என்பதால் இந்த சீசன் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .