வயலில் உள்ள மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னகுரும்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் நாகம்மாள். இவர் அவருடைய வீட்டின் அருகே உள்ள நிலத்தில் புல் அறுப்பதற்காக சென்றுள்ளார். அவர் சென்று வெகு நேரமாகியும் திரும்ப வராததால் குடும்பத்தினர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்குள்ள வயலில் மின்சாரம் தாக்கி நாகம்மாள் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகம்மாளின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நாகம்மாளின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின்பேரில் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.