Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பெண்களுக்காக… கட்டணமில்லா சானிடரி நாப்கின்… அதிரடி சேவை அறிமுகம்…!!!

தமிழகத்தில் பெண் பயணிகளுக்கு கட்டணமில்லா சானிடரி நாப்கின் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி கடந்த சில நாட்களாக அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பெண் பயணிகளுக்கு கட்டணமில்லா சானிடரி நாப்கின் சேவையில் ட்ரீம் தமிழ்நாடு அமைப்பு இணைந்து, 11 இடங்களில் அதற்கான மெஷின்களை நிறுவியுள்ளது.இதற்கான விழாவில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் சம்பத் பங்கேற்ற சேவையை இன்று தொடங்கி வைத்தார். மிக விரைவில் தமிழகம் முழுவதிலும் இந்த சேவை தொடங்கப்படும் என அவர் கூறியுள்ளார். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |