குற்றம் செய்யாத 2 கனேடியர்களை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று ஜோ பைடன் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ- வுடன் தனது முதல் அதிகாரபூர்வ சந்திப்பை தொடங்கினார். அப்போது பைடன் தனது முதல் சந்திப்பிலேயே சீனாவை எச்சரித்துள்ளார். ஏனென்றால் சீன தகவல் தொடர்பு நிறுவனமான Huawei-ன் தலைமை செயல் அலுவலராக பணிபுரியும் Meng Wanzhou என்ற பெண் வங்கி மோசடி செய்ததால் அமெரிக்க அரசு அவர் மீது குற்றம் சாட்டியது.
மேலும் அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் Meng Wanzhou-வை வான்கூவரில் வைத்து கனட அதிகாரிகள் கைது செய்தனர். இதற்கு பழிவாங்க நினைத்த சீனா, உடனடியாக சீனாவில் பணியாற்றிவரும் Michel spavor மற்றும் Michel kovrig என்ற 2 கனேடியர்களை வேவு பார்த்தார்கள் என்று குற்றம் சாட்டி கைது செய்தது. அவர்கள் இருவரும் எந்த குற்றமும் செய்யவில்லை.
அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சீனாவை எச்சரித்தார் ஜோ பைடன். மேலும் அவர்களை பத்திரமாக மீட்பதற்கு நான் உதவுகிறேன் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் காணொலி வாயிலாக அவர் உறுதியளித்தார். இதனால் பைடனுக்கு ட்ரூடோ நன்றி கூறினார்.