‘திரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிரபல நடிகை நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரிஷ்யம்’ . மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிகை மீனா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது . மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு ,கன்னடம், இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .
மேலும் திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்த அறிவிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது . திரிஷ்யம் முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ் -மீனா ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர் . இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல நடிகை நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ஆஷா சரத் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடிகை நதியா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளது .