Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சார்..! ”அது என் இடம்” மோசடி பண்ணிட்டாங்க… சென்னையில் நடந்த நில மோசடி… இருவர் அதிரடி கைது ..!!

சென்னையில் போலியான ஆவணங்களை வைத்து நிலத்தை அபகரித்த இருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்த செல்வம் என்பவர் 2003 ஆம் ஆண்டு சென்னை பள்ளிக்கரணை பகுதியில் ஸ்ரீகாமகோட்டி நகரில் 3600 சதுர அடி கொண்ட காலி நிலத்தை அவரது மனைவி திருமதி பாக்கியலட்சுமி பெயரில் வாங்கியுள்ளார்.நிலத்தின் மதிப்பு சுமார் 1.30 கோடி மதிப்புடையதாகும். இவர் நிலத்தை பார்த்து வெகு நாள்கள் ஆன நிலையில் அண்மையில் நிலத்தை பார்ப்பதற்கு சென்றுள்ளார்.அப்போது அவர் வாங்கிய அந்த நிலத்தில் ‘துளசி ஹேப்பி ஹோம்ஸ்’ என்ற நிறுவனம் அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு பணிகளை மேற்கொண்டு இருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வம் ஆன்லைனில் அவரது பத்திர பதிவு குறித்து விசாரித்துள்ளார். அதில் இந்த இடம் கிரிதரன் என்பவருக்கு செல்வம் விற்கப்பட்டதாக இருந்தது.

இதையடுத்து செல்வம் மத்திய குற்றப்பிரிவு அதிகாரியிடம் கிரிதரன் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்தார். இதனை அடுத்து கிரிபிரசாத்தை அழைத்து விசாரித்ததில் இவரது நண்பர்களான ரகு, குமரேசன், மோகனா, நாகேந்திர சிங், சவுகான் ஆகியோருடன் சேர்ந்து செல்வம் மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி பேரில் போலி அடையாள அட்டை தயாரித்து அதன் மூலம் நிலத்தை கிரிபிரசத்தின் பேரில் வாங்கியது தெரியவந்தது.

இதற்குப்பின்னர் கிரிதரன் அந்த இடத்தை துளசி ஹேப்பி ஹோம்ஸ்  நிறுவனத்திடம் கொடுத்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் கிரிபிரசாத் மற்றும் அவரது நண்பர் ரகு இருவர் மீதும் நீல அபகரிப்பு வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த மற்ற 3 குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர்.

Categories

Tech |