பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பற்றி கமல்ஹாசன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு, சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் திருச்சியில் பாதுகாப்பு பணியில் இருந்து வீடு திரும்பிய காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் எனது அறிக்கைக்கு செவிசாய்த்து ஒரு கோடி ரூபாயை தமிழ் இருக்கைக்கு அறிவித்ததற்கு மனமார்ந்த நன்றிகள். வெல்க தமிழ் என்று அவர் கூறியுள்ளார்.