Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் டாப்ஸி… வெளியான தகவல்கள்…!!!

நடிகை டாப்ஸி முதல்முறையாக பிரபல நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க உள்ளார் .

தமிழ் திரையுலகில் நடிகை டாப்ஸி ஆடுகளம் ,ஆரம்பம், காஞ்சனா 2 ,கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் . அந்த வகையில் நடிகை டாப்ஸி அனுராக் காஷ்யப்பின் டூ பாரா மற்றும் லூப் லாபெட்டா படங்களில் நடித்து வருகிறார் . மேலும் இவர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு படமான ‘சபாஷ் மித்து’ படத்திலும் நடித்து வருகிறார் .

Taapsee Pannu all set to star opposite Shah Rukh Khan? - EasternEye

இந்நிலையில் நடிகை டாப்ஸி முதல் முறையாக பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . பஞ்சாபில் இருந்து கனடாவுக்கு செல்லும் புலம் பெயர்ந்தவரின் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார் .

Categories

Tech |