Categories
லைப் ஸ்டைல்

வாய் துர்நாற்றம் உடனே நீங்க?… இத மட்டும் செஞ்சா போதும்…!!!

நம்மில் சிலருக்கு பெரும்பாலான பிரச்சினையாக இருக்கும் வாய் துர்நாற்றம் நீங்க இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நம் வாழ்க்கையில் உடல் சுத்தம் என்பது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக வாய் சுகாதாரம் ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் ஒருவரின் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் அருகில் உள்ளவர்களை முகம் சுளிக்க வைப்பது மட்டுமல்லாமல் ஒருவித இடைவெளியை ஏற்படுத்தும். அவ்வாறு வாயிலிருந்து துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்க சில இயற்கை வழிகளை பார்ப்போம். தினமும் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். அதனால் வாயிலிருந்து வீசும் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

ஒருவேளை வாய் துர்நாற்றத்திற்கு சூயிங் கம் எடுப்பதாக இருந்தால், சர்க்கரை இல்லாத சூயிங் உள்ளீட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தினமும் அதிக அளவு நீர் குடித்தால், வாய் துர்நாற்றம் நீங்கும். தண்ணீர் குடிக்க பிடிக்காவிட்டால் இஞ்சி டீ, லெமன் டீ ஆகியவற்றை குடிக்கலாம். அது வாய் துர்நாற்றத்தை நீக்குவது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்கள். சோம்பு விதைகள் வாய் துர்நாற்றத்தை தடுக்கும். தினமும் பல் துலக்கும்போது டூத் பேஸ்ட் உடன் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து ஒரு நாளைக்கு ஒரு முறை பற்களை துலக்கினால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

Categories

Tech |