Categories
உலக செய்திகள்

முன்னாள் காதலியின் 2 வயது மகனை கொன்ற நபர்… “என் குழந்தையோட சாவுக்கு நானே காரணமாயிட்டேன்”… கதறும் தாய்….!!

அமெரிக்காவில் 2  வயது சிறுவன் கொலை செய்யப்பட வழக்கில் தாயின் முன்னாள் காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் Cheyanne என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று Athian Rivera என்ற 2 வயது ஆண் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது. இதுகுறித்து காவல் துறையினரிடம் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களும் காவல்துறையினரும் குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் குப்பைத் தொட்டி ஒன்றிலிருந்து Athian Rivera சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பாக Athian Rivera-ன்  தாயின் முன்னாள் காதலன்  Wyatt Dean Lamb என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு தான் Athian- தாய் Kassandra Orona-வை  Wyatt கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் Kassandra பேஸ்புக்கில் தனது மகன் Athian இறப்பிற்காக இரங்கல் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், ” தவறானவரிடம் என் குழந்தைகளை விட்டது தான் நான் செய்த ஒரே தவறு .

நான் தான் என் குழந்தையின்  கொடூர மரணத்திற்கு காரணம். ஒவ்வொரு நாளும் அந்த நினைவு என்னை வாட்டுகிறது” என்று தெரிவித்து இருந்தார். அந்த செய்தி தற்போது பேஸ்புக்கில் இல்லை. அந்த செய்தியின் படி பார்த்தால்  Kassandra-விற்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் விஷயம் வெளிவந்ததுள்ளது. ஆனால் 2 வயது சிறுவன் Athian எப்படி இறந்தான் என்பது குறித்து தகவல்கள் எதுவும் சரியாக தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |