Categories
மாநில செய்திகள்

அனைவரையும் கவரும் அம்மா அருங்காட்சியகம்… இதன் சிறப்பம்சங்கள் என்ன…?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள “அம்மா அருங்காட்சியகம்” மற்றும் “அறிவுசார் பூங்கா” ஆகியவற்றின் சிறப்பு அம்சங்கள் பற்றி விளக்குகிறது இந்தச் செய்தி தொகுப்பு.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 80கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பீனிக்ஸ் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் உள்ளே வருவதற்கு ஒரு வழியும் வெளியில் செல்வதற்கு தனி வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அவருடைய குழந்தை பருவம் முதல் அனைத்து புகைப்படங்களும் காலவரிசைப்படி வரிசை படுத்தப்பட்டுள்ளது.

அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அறிவுசார் பூங்காவிற்கு உள்ளே நுழைந்தவுடன் நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விஷயங்கள் நம்மை வெகுவாகக் கவர்கிறது.

முதலில் “அம்மா என்னும் அற்புதம்” என்ற தலைப்பில் ஒரு பெரிய டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. அதில் மோஷன் கிராஃபிக் படங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் ஜெயலலிதாவின் இளமைப் பருவம் முதல் இறுதி பருவம் வரையிலான வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்ள தொடுதிரை மூலமாக உள்ளீடுகளைக் கொடுத்து அறிந்து கொள்ளலாம்.

Categories

Tech |