நடிகை ஸ்ரேயா ரெட்டி சுற்றுலா சென்ற இடத்தில் அவர் அறைக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை ஸ்ரேயா ரெட்டி ‘திமிரு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் . இதையடுத்து இவர் பிரியதர்ஷனின் காஞ்சிவரம் ,வசந்தபாலனின் வெயில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் . கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அண்டாவ காணோம்’ . தமிழ் ,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி கடந்த 2008ஆம் ஆண்டு விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார் .
மேலும் நடிகை ஸ்ரேயா ரெட்டி விஷால் நடிப்பில் வெளியான தோரணை ,வெடி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் சமீபத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்த ஸ்ரேயா ரெட்டி அவரது அறைக்குள் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்ததை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதில் ஸ்ரேயா தங்கியிருந்த வீட்டின் பால்கனிக்கு வந்த குரங்குகள் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுகளை சாப்பிடுகின்றன . இதையடுத்து ஜன்னல் வழியாக அறைக்குள் புகுந்த குரங்குகள் ஸ்ரேயாவின் பேக், உணவுகளை எடுத்து அட்டகாசம் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.