நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தலைவி’. இயக்குனர் விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார் . இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார் . மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் .
To Jaya Amma, on her birthanniversary
Witness the story of the legend, #Thalaivi, in cinemas on 23rd April, 2021. @thearvindswami #Vijay @vishinduri @ShaaileshRSingh @BrindaPrasad1 @neeta_lulla #BhushanKumar @KarmaMediaent @TSeries @vibri_media #SprintFilms @ThalaiviTheFilm pic.twitter.com/JOn812GajH— Kangana Ranaut (@KanganaTeam) February 24, 2021
இந்த படத்திற்காக நடிகை கங்கனா தமிழில் பேசவும், பரதநாட்டியம் ஆடவும் கற்றுக்கொண்டார் . நடிகை கங்கனா இன்று ஜெயலலிதாவின்பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் . இந்நிலையில் தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வருகிற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.