Categories
உலக செய்திகள்

மரியட் ஏரியில் மூழ்கிய படகு… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு… தீவிரப்படுத்தப்பட்ட மீட்பு பணிகள்…!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் பயணித்த படகு தண்ணீரில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்து நாட்டில் உள்ள அலெக்சாண்டரியாவில் அமைந்துள்ள மரியட் ஏரியில் படகு சவாரி செய்வது மிகவும் பிரபலமானது. இந்த ஏரியில் நூற்றுக்கணக்கான மக்கள் படகு சவாரி செய்வதோடு, அந்த ஏரியில் உள்ள தீவிற்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவர். இந்நிலையில் மரியட் ஏரியில் உள்ள தீவிற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் படகு ஒன்றில் சவாரி செய்து அங்கிருந்து கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென படகு ஏரியில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து நீரில் மூழ்கிய பெண்கள், சிறுவர்கள் உட்பட 7 பேரின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். ஆனால் மீதமுள்ள 8 பேர் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |