Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் அப்படிலாம் பேச மாட்டேன்…! நாங்க செஞ்சா தப்பு…. அவுங்க பண்ணுறது என்ன ?

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தேவை இல்லைமல் நான் யாரையுமே விமர்சிக்க மாட்டேன். ஆளுங்கட்சி  தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் இருக்கும் நல்ல விஷயங்களையும் நாம் சுட்டிக் காட்டியுள்ளேன். வாய்ப்பளித்ததோ  மாங்காய் புளித்ததோ என நான் பேசுறது இல்ல. எந்த மனிதரிடமும், நிர்வாகத்திலுள்ள நல்லதையும் சொல்லணும், கெட்டதையும் சொல்லனும்.

யாரு மேலையும் தனிப்பட்ட விரோதமோ, கோபமோ கிடையாது. அதே மாதிரி இருந்தாதான் வார்த்தைகள் எல்லாம் ஒருமையில் வரும். இந்த 4ஆண்டுகளில் அது போல ஒருமுறை கூட பேசியதில்லை.ரொம்ப பேசினாலும் நக்கலாகவும், நையாண்டியாகவும்  தான் சொல்லுவேனே தவிர யாரையும்  நேரடியா காயப்படுத்தி பேசக் கூடாதுன்னு நினைக்கிறேன். யாரு பீ டீம்னு தெரியும்.

பெரிய குளத்தில் அமமுக திமுகவை ஆதரித்ததை போல கமுதியில் திமுகவை அதிமுகவே ஆதரித்துள்ளது. உள்ளூர் பிரச்சனைகள் , லோக்கல் நிலைப்பாடு காரணமாக முடிவு எடுப்பாங்க. இதுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது. அதே நேரத்தில் மதுரையில் கலைஞர் சிலையை

முதல் முதலாக பொதுவெளியில வச்சிருக்கோம்னு சொல்லி திமுக தம்பட்டம் அடிச்சுகிறாங்களே அந்த சிலையை பெருந்தன்மையாக கொடுத்ததா ஒரு அமைச்சர் சொல்லுறாரு. அவங்க செஞ்சது பெருந்தன்மை…. அது பி டீம் கிடையாது, சி டீம் கிடையாது, நாங்க எது செஞ்சாலும் குற்றச்சாட்டு சொல்லணும். தவறு செய்தவர்கள் தான் அடுத்தவங்கள பத்தி குற்றச்சாட்டு சொல்லுவாங்க என டிடிவி தெரிவித்தார்.

Categories

Tech |