மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு சற்று மந்தமான உணர்வுகள் காணப்படும்.
அதனை தவிர்த்து விடுதல் நல்லது. இன்று நீங்கள் அதிக பணிகள் இருப்பதாக உணர்வீர்கள். அதனை கையாளவும் கற்றுக் கொள்வீர்கள். இன்று பணிகள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இன்று நீங்கள் திட்டமிட்டு பணியாற்றினால் வெற்றி கிடைக்கும்.
இன்று நீங்கள் உங்கள் துணையுடன் கலகலப்பாக பழக வேண்டும். அதனால் ஆரோக்கியமான உறவை பராமரிக்கப்பட்டு நல்லுறவு ஏற்படும்.
இன்று உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது அதிக செலவு வர வாய்ப்பு உள்ளது. பணம் இழக்காமல் இருக்க சாதுரியமாக திட்டமிட்டு செயல்படுங்கள். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது கண் எரிச்சல் மற்றும் முதுகு வலி மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிரார்த்தனை செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். கூடுதல் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் சிவன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை நிறம்.