வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணத்தை பாதுகாப்பான முறையில் பண பரிவர்த்தனை செய்வதற்காக டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனையை செய்து வருகின்றனர். மேலும் தனியார் வங்கிகளை விட அரசு வங்கிகளிலேயே மக்கள் பணப்பரிவர்த்தனை செய்கின்றனர். அரசு வங்கிகளில் நேரடியாக சென்றும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை தனியார் வங்கிகளும் மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
வரிகள் மற்றும் பிற வருவாய் கட்டண சேவைகள், ஓய்வூதிய சேமிப்பு உள்ளிட்ட சேவைகளை இனி அரசு வங்கிகள் மட்டுமல்லாமல் தனியார் வங்கிகளும் வழங்கலாம். இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு இனி தனியார் வங்கிகளும் சம பங்களிக்கலாம் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.