Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதாவுடன் நேரடியாக பேச…. ஒரு பட்டனை அழுத்தினால் போதும் – சூப்பர் சான்ஸ்…!!

நாம் பட்டனை அழுத்தி கேட்கும் கேள்விகளுக்கு ஜெயலலிதா நேரடியாக பதில் சொல்வதுபோல் சென்னை அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க இருப்பதால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை சிறப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சரின் நினைவிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அண்மையில் திறந்து வைத்தனர். இதையடுத்து நேற்று ஜெயலலிதாவின் பிறந்தநாள் அமோகமாக அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் கட்டப்பட்டுள்ள அம்மா அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் ஜெயலலிதாவுடன் நேரடியாகப் பேசுவது போன்ற தொழில் நுட்பம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அமைக்கப்பட்ட தனி அரங்கில் நாம் பட்டனை அழுத்தி கேட்கும் கேள்விகளுக்கு ஜெயலலிதா நேரடியாக பதில் சொல்வதுபோல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |