Categories
மாநில செய்திகள்

BREAKING: கட்டாயம் 7 நாட்கள் தனிமை… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம். அவ்வாறு கொரோனாவும் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் ஓர் கொரோணா பரிசோதனை செய்ய வேண்டும். அந்த சோதனையில் பாசிட்டிவ் என்று வந்தால் மருத்துவமனை கோவிட் கேர் மையங்களில் தங்க வைக்கப்படுவர் எனவும் அறிவித்துள்ளது.

Categories

Tech |