17 வயது சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள பூவேந்தன் நல்லூர் பகுதியில் கார்த்திகேயன் என்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகேயன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார். இதனையடுத்து தனது மகளை காணவில்லை என காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்து விட்டார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் வெளியூரில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை மீட்டு இருவரையும் சேத்தியா தோப்பு மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துவிட்டனர். அதன்பின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விட்டனர். அதன்பின் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதோடு அந்த சிறுமியையும் அவரது தாயாரிடம் ஒப்படைத்து விட்டனர்.