Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

யாராவது கதவ திறங்க… 4 மர்மநபர்களின் செயல்… போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலமேடு பகுதியில் நவநீத பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடுதுறை அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது கணவனான செங்குட்டுவனை விட்டு பிரிந்து இரண்டு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று 4 மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதன்பின் மர்மநபர்கள் வீட்டில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி 10 பவுன் நகை, டிவி ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு அனைவரையும் வீட்டில் வைத்து பூட்டி வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து நவநீதபாலு மற்றும் அவருடைய மகன்கள் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கதவை திறந்துள்ளனர். இதுகுறித்து நவநீதபாலு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தி தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |