இந்தியாவில் இரண்டாம் கட்டமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவுள்ளது.
நம் நாட்டில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மார்ச் 1 ஆம் தேதி தடுப்பூசி பணியை தொடங்க இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது, “60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் 45 வயதிற்கு மேற்பட்ட நோய் பாதிப்பு அடைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் 10,000 அரசு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசமாக செலுத்தப்படும், 20 ஆயிரம் தனியார் மையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும். தனியார் மையங்களில் தடுப்பூசி போட விரும்புபவர்கள் கட்டணம் செலுத்தி தடுப்பூசியை பெற்று கொள்ளலாம். அதற்கான கட்டணங்கள் இன்னும் சிறிது நாட்களில் நிர்ணயம் செய்யப்படும்” என்று அவர் கூறினார்.இரண்டாம் கட்டமாக தடுப்பூசி செலுத்துவதன் மூலம் சுமார் 27 கோடி மக்கள் பயனடைவார்கள். அதில் 10 கோடி பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் என்று தெரியவந்துள்ளது.