Categories
மாநில செய்திகள்

இனி வாரத்தில் 3 முட்டை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் இனி வாரத்தில் 3 முட்டை குழந்தைகளுக்கு வழங்கப்படும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த 18ஆம் தேதி புதுச்சேரி கவர்னராக பொறுப்பேற்றார். அதன் பிறகு கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் சமீபத்தில் அருகிலுள்ள ரோடியர் மில் வீதிக்குச் சென்று அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு நடத்தினார். அங்கு குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்களைக் கொடுத்து குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.பின்னர் அங்குள்ள குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்படுவதை அறிந்த கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் குழந்தைகளின் புரதச்சத்து தேவையை உணர்ந்து வாரத்தில் மூன்று முட்டைகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனை அரசுத் துறைக்கு அறிவுறுத்தி அதற்கான செலவினங்களுக்கு ஒப்புதல் அளித்தார். புதுச்சேரி மாநிலத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள் மொத்தம் 855 உள்ளன. அம்மையங்களில்  6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது எனவும் இதில் 29 ஆயிரத்து 846 குழந்தைகள் பயன்பெறுகின்றன எனவும் , புதுச்சேரி அரசுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ஒரு கோடியே 68 லட்சம் கூடுதல் செலவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |