சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி தலைமை தாங்கியுள்ளார். மேலும் அரசு ஊழியர் சங்க தலைவர் சரவனராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் அரசு ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது முழுநேர அரசு ஊழியராக வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும், சட்டரீதியான ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். அதன்பின் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.